ஒருமுறை டேங்க் முழுமையாக நிரப்பினால் உங்கள் ஹோண்டா ஆக்டிவா எவ்வளவு தூரம் செல்லும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா ஒன்றாகும்

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வாங்கும் சிறந்த பிராண்ட் வாகனங்களில் ஆக்டிவா ஒன்றாகும். இந்த இருசக்கர வாகனத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஹோண்டா நிறுவனம் ஆக்டிவாவில் 4 ஸ்ட்ரோக் SI இன்ஜினை வழங்கியுள்ளது இதன் மூலம் 8000 rpm இல் 5.77 KW பவர் கிடைக்கும்

இதில் ஆட்டோமேட்டிக் Vmatic டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா ஆக்டிவா முழு டேங்க் கொள்ளளவு 5.3 லிட்டர்கள் ஆகும்.

ஒருமுறை முழு டேங்க் நிரப்பினால் இந்த ஸ்கூட்டரை 220 - 235 கிலோமீட்டர் வரை ஓட்டலாம்

ஒரு லிட்டர் பெட்ரோலில் ஹோண்டா ஆக்டிவா 45 முதல் 50 கிலோமீட்டர் தூரம் செல்லும்

ஸ்கூட்டரின் இருக்கை நீளம் 692 மிமீ உள்ளது மேலும் 162 மிமீ தரை இடைவெளி கிடைக்கிறது

ஹோண்டா ஆக்டிவா எக்ஸ் ஷோரூம் விலை 77,967 ரூபாய், அதேபோல ஆன் ரோடு விலை 99,556 ரூபாய்.