மாருதி சுசுகி நிறுவனம் சுமார் 16 ஆயிரம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது அறிவிப்பின்படி மாருதியின் பலேனோ, வேகன் ஆர் கார் மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன ஃபியூல் பம்ப் கோளாறு காரணமாக இரண்டு ஹேட்ச்பேக்குகளும் ரீகால் செய்யப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட கார் மாடல்களின் கோளாறு கட்டணமின்றி சரிசெய்யப்படும் - மாருதி 2019ல் ஜுலை 30 முதல் நவம்பர் 1 வரை தயாரான 11,851 பலேனோ கார்கள் ரீகால் செய்யப்பட்டுள்ளன பலேனோ கார் மாடல் விலை ரூ.8.07 லட்சம் தொடங்கி ரூ.11.68 லட்சம் வரை நிர்ணயம் 2019ல் ஜுலை 30 முதல் நவம்பர் 1 வரை தயாரான 4,190 வேகன் ஆர் கார்கள் ரீகால் செய்யப்பட்டுள்ளன வேகன் ஆர் கார் மாடல் விலை ரூ.5.54 லட்சம் தொடங்கி ரூ.7.38 லட்சம் வரை நிர்ணயம் ஃபியூல் பம்ப் பிரச்னை இன்ஜினின் ஸ்டார்டிங் டிரபுள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம் - மாருதி ஸ்டியரிங் வீல் பிரச்னையால் அண்மையில் எஸ்-பிரஸ்ஸோ, ஈகோ கார் மாடல்களின் 87,000 யூனிட்களை திரும்பப் பெற்றது