வாழ்க்கை முறை மாற்றங்கள், போதிய உடற்பயிற்சி இன்மை என பல காரணங்களால் முதுகுவலி உண்டாகிறது



மருந்து, மாத்திரைகள், எண்ணெய் தற்காலிக தீர்வை கொடுத்தாலும் நிரந்தர தீர்வை பெற யோகா சிறந்த வழியாகும்



இரண்டு கை, இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி கீழ் நோக்கிய ‘V’ நிலையான
முக ஸ்வனாசனா முதுகுவலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்


தினமும் ஆழமான மூச்சுப்பயிற்சியுடன் ஐந்து முறை இந்த யோகாவை மேற்கொள்ள வேண்டும்



உள்ளங்கைகளை தரையில் ஊன்றி முட்டி போட்டு தலையை இருகைகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்



பின் தலையை மேல்நோக்கி ( பூனை நிலை) பார்த்து மூச்சை நன்கு இழுத்து விட்டு “மர்ஜரியாசனம்” செய்ய வேண்டும்.



உட்கார்ந்த நிலையில் முன்னோக்கி வளைதல் போன்ற ஆசனம் பச்சி மோத்தாசனம்.



பச்சி மோத்தாசனம் முதுகுவலியை போக்குவதோடு கல்லீரல், விறைப்பு, செரிமான தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கிறது



வெட்டுக்கிளி போஸ் எனப்படும் சலாபாசனா முதுகுவலிக்கு சிறந்த தீர்வாகும்.



சுமார் 30 விநாடிகள் மார்புப் பகுதி தரையில் இருக்க கை, கால்களை ஒரே நேரத்தில் மேலே தூக்கி இந்த ஆசனம் செய்யலாம்.