நம்மில் பலரும் எஞ்சிய உணவுகளை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம் அவ்வாறு சாப்பிடும் போது சத்துக்கள் அழிக்கப்படுவதோடு பல நோய்களுக்கும் இது வழிவகுக்கிறது உருளைக்கிழங்கை மீண்டும் சூடேற்றக்கூடாது. சமைத்த உருளைக்கிழங்கு நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் இருந்தால் அது நஞ்சாக மாறிவிடும் சமைத்த சாதத்தை அறைவெப்பநிலையில் வைத்திருந்தால் அதில் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும் புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை சமைத்த பின்னர் மீண்டும் சூடேற்றினால் செரிமான பிரச்சனை உண்டாகும் சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் அதனை மீண்டும் சூடேற்றினால் உடல் உபாதைகள் ஏற்படும் பசலைக்கீரையை மீண்டும் சூடுபடுத்தும் போது அதிலுள்ள நைட்ரேட்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாக மாற்றப்படும் கிரேப் சீட், வால்நட் எண்ணெய், ஆளி விதை எண்ணெய் போன்றவற்றை சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. இதனை உணவின் இறுதியில் மட்டுமே சேர்க்கவும் காளானை சமைத்த அன்றே சாப்பிட வேண்டும். அதனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் செரிமானம் மற்றும் இதய பிரச்சனைகள் ஏற்படும் சமைத்த பீட்ரூட்டை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிலுள்ள நைட்ரேட்டுகள் மாற்றமடைந்து உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும்