அமிதாப் பச்சன் இந்த நூற்றாண்டின் மெகா ஸ்டார் இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆடம்பர வீடுகள் முதல் விலை உயர்ந்த கார்கள் வரை இவரது சொத்து மதிப்பு கோடிகளை தாண்டியுள்ளது இவருக்கு மும்பையில் குறைந்தது ஐந்து பங்களாக்கள் உள்ளன தனது குடும்பத்துடன் ஜூஹூவில் உள்ள ஜல்சா எனும் பங்களாவில் வசித்து வருகிறார் இந்த பங்களாவின் விலை சுமார் ரூ.100 கோடி என கூறப்படுகிறது இரண்டாவது பங்களாவான பிரதிக்ஷாவின் மதிப்பு ரூபாய் 160 கோடி அமிதாப் பச்சனிடம் குறைந்தது 11 சொகுசு கார்கள் உள்ளன அவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.6 கோடியும், விளம்பரங்களுக்கு ரூ.5 கோடியும் வசூலிக்கிறார்