அமேசான் காடுகள் ‘உலகின் நுரையீரல்’ என்றழைக்கப்படுகிறது.



உலகின் நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது அமேசான் மழைக்காடு.



அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும். அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.



தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அமேசான் காடுகள். உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடு.



இங்கு ஆண்டு முழுவதும் மழை பெய்யும் என்பது சிறப்பு.







இது பல்வேறு உயிரினங்களின் உயிர்ச்சூழலுக்கு ஆதாரமாக உள்ளது.



75% அமேசான் மழைக்காடுகள் வறட்சி, காட்டுத்தீ மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தானாகவே மீளும் திறனை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது ஆய்வு.


உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் இந்த காடு கடும் வறட்சியை சந்திக்கும் என்றும், பூமி மனிதன் வாழ இயலாததாக மாறும்.



இக்காடுகளில் சமநிலையை பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.