ஓமம் செரிமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு அளிக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே! இதில் இருக்கும் மருத்துவ நலன்கள் பற்றி மருத்துவர்கள் சொல்வதைக் கேட்கலாம். குடல் பகுதியில் இருக்கும் புழுக்களை அழிக்கும் திறன் கொண்டது. குடலில் உள்ள சில வகையான பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. சளியை வெளியேற்ற சிறது ஓம நீரை பருகலாம். ஒரு டீஸ்பூன் ஓமத்தைப் பொடியாக்கி, துணியில் கட்சி அவ்வப்போது முகர்ந்துவந்தால் மூக்கடைப்பு இல்லாமல் போகும். நெஞ்சரிச்சலைக் குறைக்கும். வாய்வு கோளாறுக்கு பலனளிக்கும் ஓம நீராகவும் பருகலாம். செரிமான மண்டலத்தை சீர்படுத்தும்.