பிரண்டையை நன்கு கழுவி மேல் தோலை உரித்து சுத்தம் செய்யவும் வரமிளகாய், புளி, பூண்டு, இஞ்சி நல்லெண்ணெய் (தேவைக்கேற்ப) தேங்காய் - அரை மூடி, கடலை, உளுத்தம்பருப்பு - 1 கரண்டி வாணலியில் முதலில் பிரண்டையை வதக்கி எடுத்து பின் மீதி அனைத்தையும் ஒன்றாக வதக்கி எடுக்கவும் தேங்காய் வதக்கி, புளி சேர்த்து அரைத்தால் சுவையான பிரண்டைத் துவையல் தயார்! பிரண்டை அரிக்கும் தன்மை கொண்டதால் அதைக் கையாளும்போது கவனம் தேவை. எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது, அனைத்து வயதினரும் உண்ணலாம். வாரம் ஒருமுறை பிரண்டை சாப்பிடுவது பல நோய்களை நம்மிடமிருந்து அப்புறப்படுத்தும்.