இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சுரபி தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார் ரசிகர்களின் மனதை முதல் படத்திலேயே கொள்ளையடித்த சுரபிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. வேலையில்லா பட்டதாரியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து செல்வார். ஜீவா திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் நடித்திருந்தார். தெலுங்கில் இவருக்கு மிகப் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். கன்னடத்திலும் இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடிகர் ஜெய்க்கு ஜோடியாக புகழ் என்ற படத்தில் நடித்திருப்பார். 2013ஆம் ஆண்டு இவன் வேற மாதிரி திரைப்படம் தமிழில் வெளியானது. தற்போது சுரபி தமிழ் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் இவர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.