நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் அவர்களுக்கு விஹான், ஆத்யா என ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது இவர்களின் வழக்கம் இவர்களின் மூத்த மகன் விகானின் ஏழாவது பிறந்தநாள் இன்று இன்ஸ்டாகிராமில் பிரசன்னா தன் மகனுடன் எடுத்த புகைப்படங்களை சிறு குறிப்பு ஒன்றுடன் பதிவிட்டுள்ளார் ‘அன்புள்ள பட்டப்பா! என் வாழ்விற்கு புதிய அர்த்தம் நீ கொடுத்துள்ளாய்’ என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லம்' என சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த 7 ஆண்டுகளாக நீ எங்கள் வாழ்க்கையில் அன்பையும் சந்தோஷத்தையும் அள்ளி கொடுத்துள்ளாய் என இருவரும் பகிந்துள்ளனர் ‘நீ எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்’ என சினேகா தெரிவித்திருந்தார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விகான்!