தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. நானும் ரவுடி தான் படத்தின் போது மலர்ந்தது இவர்களின் காதல். நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த ஜோடியின் 6 வருட காதல் அத்தியாயம் இந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இந்த ஜோடி அவர்களது திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் இடம் வழங்கினர். தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதியினர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிரிந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் பலர் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமண புகைப்படங்களை அவ்வப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பயணம் பற்றிய ஆவணப்படம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது என நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.