பிரபல நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் நடித்துள்ளார். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். 2003ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். பள்ளி காலத்திலே விளம்பரப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2003ம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமானார். பாரதிராஜாவால் தமிழில் அறிமுகமானார். பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது வாங்கியுள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் பல படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.