நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது



விக்கி இயக்கிய நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது



இதுவரை விக்னேஷ் சிவன் இயக்கிய 4 படங்களில் 2 படங்களில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்துள்ளார்



ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய இவர்கள் பட தயாரிப்பு, விநியோக உரிமை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்



விக்கி -நயன் காதலிப்பதாக வதந்தி பரவிய நிலையில் சமூக வலைத்தளம் மூலம் அதனை உறுதி செய்தனர்



அடிக்கடி நயனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்



6 ஆண்டு காலமாக விக்கி- நயன் காதலித்து வரும் நிலையில் இந்த ஜோடி பிரிந்து விடும் என நினைத்தவர்கள் ஏராளம்



இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது



தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் ஜோடிகளில் ஒன்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணையாகும்



விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இந்து முறைப்படி மகாபலிபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது