ஹாப்பி பர்த்டே நமீதா! நமீதா குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தவர். கடந்த 2004-ம் ஆண்டு, நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். 2017-ம் ஆண்டு நமீதா - வீரேந்திர செளத்ரி திருமணம் நடந்தது. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா,தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். திடீரென பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கவும் சினிமா, மீடியாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தமிழில் இவர் நடித்த எங்கள் அண்ணா, அழகிய தமிழ் மகன்,பில்லா, பம்பர கண்ணாலே ஆகிய படங்கள் பிரபலம். அவர் தன் ரசிகர்களை மச்சான் என்று கூறுவது மிகவும் பிரபலம். மன அழுத்தம் காரணமாக உடல் எடை அதிகரித்துவிட்டதாக மனம் திறந்து பேசினார். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். முன்னெப்போதும் இல்லாதபடி நீ என்னை மாற்றியிருக்கிறாய் - தாய்மை குறித்து நமீதா 2017-இல் பா.ஜ. கட்சியில் இணைந்தார். மகிழ்ச்சியான வாழ்க்கையில் பிஸியாக இருக்க வாழ்த்துகள் நமீதா..