யானை- காடுகளின் பல்லுயிர்ச்சூழல் நண்பன்!

ஒரு யானை கூட்டம், ஆண்டுக்கு, 350 - 500 ச.கி.மீ., வரை உணவுக்காக பயணிக்கும்.

காடுகளின் ஆரோக்கியம் யானைகளின் நல்வாழ்வில் பொதிந்திருக்கிறது.

சராசரியாக யானை மணிக்கு 6.5 கிலோமீட்டர் வரை நடக்கும்.

ஓடும்போது மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் யானையால் அயராது வெகுதூரம் நடந்தே செல்ல முடியும்.

ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது.

ஒரு நாளைக்கு 150 முதல் 220 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது.

காட்டில் யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது.

ஆப்பிரிக்க, ஆசிய காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

வனம் இல்லை எனில் தண்ணீர் இல்லை. இவை இல்லை எனில் நாம் இல்லை.யானைகள் நமக்கு தேவை!