சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திரங்கள் இருவரும் ஷெர்ஷா படப்பிடிப்பின் போது காதலில் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர் இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் கோலாகலமாக நடைப்பெற்றது சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் விக்கி கெளஷலுடன் பங்குபெற்ற கியாரா அப்போது சித்தார்த் எப்படி ப்ரோபோஸ் செய்தார் என்பதை குறித்து பேசியுள்ளார் கியாரா, சித்தார்த் மற்றும் சித்தார்த்தின் அண்ணன் மகன் ஆகிய மூவரும் ஒருமுறை ரோமிற்கு சென்றுள்ளனர் அங்கிருக்கும் பெரிய ஹோட்டலில் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட்டுள்ளனர் அங்கு ஒருவர் வொயலின் வாசிக்க ஆரம்பித்த உடன், கூட வந்த அண்ணன் மகன் கேமராவில் படம் பிடிக்க ஆரம்பித்துள்ளார் இதனை அடுத்து, சித்தார்த் முட்டி போட்டு ப்ரோபோஸ் செய்துள்ளார் ப்ரோபோஸ் செய்வதற்காக, “நான் டில்லியை சார்ந்த சாதாரண பையன்..” என ஷேர்ஷா படத்தின் வசனத்தை கூறியுள்ளார்