மூக்குத்தி முத்தழகு

மூணாம்பிறை பொட்டழகு

பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச

நெல்லுமணி பல்லழகு

பத்து விரல் பூவழகு

பாதம் தங்க தேரழகு

வானம் விட்டு மண்ணில் வந்தாள்

நிலவல்ல பெண்ணழகு.

மருதாணி கொடி போல

மவுசாக அவ நெறமா

ஆஹா என்ன நடையோ

ஆஹா அன்ன நடையோ

மழை பெஞ்ச தரை போல

பதமாக நானிருப்பேன்

ஆஹா என்ன அழகோ

ஆஹா வண்ண மயிலோ

வலை வீசும் கண்ணழகு

வளைந்தாடும் இடையழகு