விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ளார் விருமன் திரைப்படக் குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது கார்த்தி,அதிதி, ராஜ்கிரண்,சூரி, இயக்குநர் முத்தையா என பலர் கலந்து கொண்டனர் ஷூட்டிங்காக வெளியூரில் தங்கிய போது தன்னை பார்த்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார் அதிதி அவங்க வீட்டு பொண்ணு போல என்னை பார்த்துக் கொண்டார்கள்; மிகவும் பாதுகாப்பாக இருந்தது என்றும் அதிதி கூறினார் தன்னை தேன்மொழியாக மாற்றிய இயக்குநருக்கும் அதிதி நன்றி தெரிவித்து இருந்தார் பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டதாகக் கூறினார் அதிதி நடிகர் கார்த்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்றும் கூறியிருந்தார் நடிகர் கார்த்தி போலவே நானும் பெரிய இடத்திற்கு செல்வேன் என நம்புகிறேன் என்றும் கூறினார் அதிதி, அவரது முதல் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை பாடியுள்ளார்