கார்த்தி நடித்துள்ள விருமன் படம் வரும் 12ந்தேதி வெளியாகவுள்ளது இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது விருமன் படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதீ சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் படத்தின் இசைவெளியீட்டு விழா மதுரையில் நடந்தது இதில் நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட படக்குழு கலந்து கொண்டனர் விருமன் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது அதன் ஒரு பகுதியாக படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது இதில் பேசிய நடிகர் கார்த்தி, ' 2டி நிறுவனம் படத்தோட பிரோமோஷனுக்கு பெரிய அளவுல செலவு பண்றாங்க' என்று கூறினார் மேலும், 'கொம்பன், கடைக்குட்டி சிங்கம் படத்துல பருத்திவீரன் சாயல் வரக்கூடாது அப்படின்னு ரொம்ப மெனக்கிட்டேன்' என்றும் பேசியுள்ளார் 'படத்துல பந்தல் போடுற பையன் கேரக்டர் கொடுத்துருக்காங்க' என்று தனது கதாப்பாத்திரம் குறித்தும் கார்த்தி பேசியுள்ளார்