வயதானாலும் இளமைக்குறையாத நடிகர்களுள் ஒருவர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் கதையில் மிக முக்கிய கதாப்பாத்திரம் இவருடையது இவர் இடம் பெற்றுள்ள சோழா சோழா பாடல் ட்ரெண்டாகி வருகிறது படத்தின் ப்ரமோஷன் பணிகள் பல்வேறு நகரங்களில் நடந்தது படக்குழுவுடன் விக்ரமும் மும்பை, கேரளா ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்தார் அப்போது விக்ரம் பேசிய பல வீடியோக்கள் வைரலானது அதில் ஒன்று அவர் தஞ்சாவூர் பெரிய கோவில் குறித்து பேசிய வீடியோ டெல்லியில் நடைபெற்ற கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் படக்குழு கலந்து கொண்டனர் இதில் விக்ரமுடன் இணைந்து ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரும் உள்ளனர்