கிக் திரைப்படத்தின் டப்பிங் ஓவர்... புது போட்டோ வெளியிட்ட நடிகர் சந்தானம்!

நடிகர் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆக்ஷன் காமெடி திரைப்படம் கிக்

கன்னடத்தில் ஜூம் வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து தமிழில் “கிக்” என ரீமேக் செய்துள்ளார் பிரசாந்த் ராஜ்

ஃபார்சூன் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார் நவீன் ராஜ்.

இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசை அமைத்துள்ளார்

படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடிக்கின்றனர்

கிக் திரைப்படம் குறித்த அப்டேட்கள் வரத் தொடங்கியது

தற்போது கிக் திரைப்படத்தின் டப்பிங் ஓவர் என தனது இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டுள்ளார் சந்தானம்

கிக் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது