தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் நடிகர் ராஜ்கிரண் ஐபிஎஸ் படிக்க ஆசைப்பட்டவர் காலத்தின் கட்டாயத்தால் சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்தவர் விநியோகஸ்தராக களம் இறங்கியவர் சறுக்கல்களை சந்தித்த பிறகு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் 'என்ன பெத்த ராசா' தான் நடிகர் ராஜ்கிரண் தயாரித்த முதல் படம் 'ராசாவின் மனசிலே' திரைப்படம் மூலம் ஹீரோவானார் கம்பீரமான தோற்றத்தால், நடிப்பால் நடிகராக மக்கள் மனங்களை கவர்ந்தார் ஒரு பிரேக் எடுத்திக்கொண்டவர் நந்தா படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் பாண்டவர் பூமி, ரஜினிமுருகன், மஞ்சப்பை, பா. பாண்டி, சண்டக்கோழி, காவலன் என தூள் கிளப்பினார் சமீபகாலமாக நகைச்சுவை கலந்த பாத்திரங்களிலும் ரசிக்க வைக்கிறார் நடிகர் ராஜ்கிரண் இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்