எடையை குறைத்த நிவின் பாலி... வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜு வர்க்கீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிவின் பாலியின் தற்போதைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி பிரேமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானவர்

நேரம் திரைப்படத்தில் பிரேமம் திரைப்படத்தை விட ஒல்லியாக இருப்பார் நிவின் பாலி

அதன் பின்வரும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் சற்று எடை அதிகரித்தே காணப்பட்டார்

இதற்காக ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர்

'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தில் தற்போது நிவின் பாலி நடித்து வருகிறார்

தற்போது அவருடைய இந்த மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது

நிவின் பாலியின் இந்த ஸ்லிம்மான லுக் எந்த திரைப்படத்திற்காக என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிவின் பாலி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது