நடிகர் அஜித்தின் ஃபோட்டோக்களும் வீடியோக்களும் தான் தற்போதைய ட்ரெண்டிங்காக உள்ளது



சமீபத்தில் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்துள்ளார்



இந்த கூட்டணியில் முதலில் நேர்கொண்ட பார்வை நடித்தார்



பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை படத்தில் நடித்தார்



தற்போது துணிவு படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு படம் வெளியாகும் என கூறப்படுகிறது



அதைத் தொடர்ந்து அஜித் குமாரின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்



சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்



இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது



‘‘ஏகே 62” படத்திற்கு பிறகு நடிகர் அஜித் பைக்கில் உலக சுற்றுப்பயணம் போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



3 இணை பைக்கர்களுடன் 18 மாதங்களில் 7 கண்டங்கள், 62 நாடுகளை சுற்றி வர உள்ளார்