கத்தி 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும் இப்படத்தை சுபாஸ்கரன் தயாரித்தார் ஈரோஸ் இன்டர்நேஷனல், இப்படத்தை விநியோகம் செய்தது இப்படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரு வேடங்களில் விஜய் நடித்தார் சமந்தா ரூத் பிரபு, நீல் நிதின் முகேஷ், டோட்டா ராய் சௌத்ரி மற்றும் சதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் தோன்றினர் துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்த இரண்டாவது படம் இது அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்தார் கத்தி, 22 அக்டோபர் 2014 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது இப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியானது படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது