தினசரி இரண்டு வேளை பல் துலக்குதல் அவசியம் பற்களின் இடையே floss கொண்டு சுத்தம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் குடி மற்றும் புகைப் பழக்கம், புகையிலை ஆகியவற்றிலிருந்து விலகியே இருங்கள் கார்பனேற்றம் செய்யப்பட்ட திரவங்கள், டீ, காபி ஆகியவற்றை அடிக்கடி அருந்துவதை கைவிடுங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடியுங்கள், டயட் திட்டத்தை விடாப்பிடியாக பின்பற்றுங்கள் பற்களில் வலி இருந்தால் நீங்களே முதலுதவி செய்து கொள்ளாமல் பல் மருத்துவரை அணுகுங்கள் சர்க்கரை நிறைந்த உணவு, இனிப்பு பொருள்களை அடிக்கடி உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் நன்கு வாய் கொப்பளியுங்கள்