சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் , ரஜினிகாந்த் , குஷ்பு நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை .
. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது.
ஏழை , பணக்கார நண்பர்களிடையே ஏற்படும் விரிசலும் , அதனால் பாதிக்கப்படும் ஏழை நண்பன் எப்படி தான் விடுக்கும் சவாலில் ஜெயித்து காட்டுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்
அண்ணாமலை திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் கரகாட்டக்காட்ரன் திரைப்பட புகழ் சண்முக சுந்தரம்.
நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்
அண்ணாமலை திரைப்பம் 1987 ஆம் ஆண்டும் இந்தியில் வெளியான Khudgarz என்னும் படத்தின் ரீமேக். Khudgarz திரைப்படம் ஜேர்ஃபி ஆச்சரின் Kane and Abe என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் .
ரஜினிகாந்திற்கு முதல் முறையாக சூப்பர் ஸ்டார் என்னும் டைட்டில் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அதனை விரும்பவில்லை.
வெறும் 45 நாட்களில் எடுக்கப்பட்ட அண்ணாமலை திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் கரகாட்டக்காரன் திரைப்பட புகழ் சண்முக சுந்தரம்.