1997 ஆம் ஆண்டு சரத் குமார், தேவயானி , ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியான திரைப்படம் சூர்ய வம்சம். திரைப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடு வெள்ளி விழா கண்ட திரைப்படம் . இந்தப் படத்தில் ஏகப்பட்ட செண்டிமெண்ட் காட்சிகள் வரவேற்பை பெற்றன. ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ, சலக்கு சலக்கு சருகை சேல என எல்லா பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட். நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது ...அட ! அட! அந்த பாடலை எப்படிங்க மறக்க முடியும் .. பாயசம் சாப்பிடுங்க ஃபிரண்ட் “ நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது ...அட ! அட! அந்த பாடலை எப்படிங்க மறக்க முடியும் .. ம்ம்ம்ம்...ஒரே பாட்டுல பணக்காரனாக இது என்ன சூர்ய வம்சம் படமானு...ஒட்டுமொத்த தமிழகத்தையே ஏங்க வைத்த பாடல்.. அப்பறம் பின்னணி இசையையும் சேர்த்துக்கோங்க “ ஆஆஆன் அஅஅன்ஹ...ஆஆஆன் அஅஅன்ஹ..ஆஆ....ஆன் அஅ..அன்ஹ” சூர்ய வம்சம் திரைப்படம் ஒரு “nostalgic” தானே !