2002ம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ் மெலிந்த உடல், மீசையில்லாத முகம் என பல கிண்டல் கேலிகளை சந்தித்தவர் காதல் கொண்டேன் படம் மூலம் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்றார் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து மாஸ் ஹீரோவானார் பக்கத்து வீட்டுப் பையன் போன்ற இவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது கதாபாத்திரத்துக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த கூடிய திறமையானவர் ஹிந்தியிலும் தென்னிந்திய நடிகராக ஜெயித்து காட்டியவர் ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் இன்றுடன் 21 ஆண்டு திரைப்பயணத்தை நிறைவு செய்கிறார் இணையம் முழுவதும் இந்த சகலகலா வல்லவனுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது