இந்தியாவின் மிகவும் பழம் பெரும் கதக் நடன கலைஞர்களில் ஒருவர் பிர்ஜூ மகாராஜ்.



இவர் 1938ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி ஒரு நடன கலை குடும்பத்தில் பிறந்தார்.



இவருடைய குடும்பம் கதக் நடன கலையில் தேர்ச்சி பெற்று இருந்ததால் இவரும் அதே கலையை கற்றார்.



இவர் 1964ஆம் ஆண்டு சங்கீத நாடக் அகாடமியின் விருதை வென்றார்.



இவர் பாரதிய கலா கேந்திராவில் பல ஆண்டுகள் கதக் பயிற்சியாளராக பணிபுரிந்தார்.



1998ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்விற்கு பிறகு டெல்லியில் ஒரு நடன பள்ளியை தொடங்கினார்.



இவருக்கு 1986ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.



2012ஆம் ஆண்டு தமிழில் கமல் நடத்த விஸ்வரூபம் திரைப்படத்தின் பாடலுக்காக இவர் தேசிய விருதை வென்றார்.



2016ஆம் ஆண்டு இந்தி படமான பாஜிராவ் மஸ்தானியில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்தற்காக தேசிய விருதை மீண்டும் வென்றார்.



கதக் நடன கலைஞர் பிர்ஜூ மகாராஜ் 83 வயதில் இன்று உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.