இக்காலத்தில் உள்ள குழந்தைகள் வெளியே சென்று விளையாடவே நினைப்பதில்லை



அவ்வாறு குழந்தைகள் விரும்பினாலும் பெற்றோர்கள் பல காரணங்களையும் கூறி அனுமதிப்பதில்லை



குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்



உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி சீராக இருப்பதோடு அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும்



விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுறையீரல் ஆரோக்கியமாக இருக்கும்



மேலும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும், படிப்பில் கவனம் கூடும்



விளையாடுவதால் பசி எடுக்கும். நாம் கேட்காமல்.. கெஞ்சாமல் உணவு தானாக உள்ளே போகும்



உடலில் உள்ள கழிவு உப்புக்கள் வியர்வையாக வெளியேறும்



ளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வரும்



மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்