ஆலியா பட்டின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம், கங்குபாய் காத்யாவாடி மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட கதை இது இதனை சஞ்சை லீலா பன்சாலி இயக்கியிருந்தார் இளம் வயதிலேயே பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் கங்குபாய் என்ற பெண் குறித்த கதை இது இந்த படத்தின் ரிலீஸ் டேட் ஆரம்பத்தில் தள்ளிப்போனது பெரும் சிரமங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு பிப்.மாதம் 25ஆம் தேதி வெளியானது இதில், கங்குபாயாக நடித்திருந்த ஆலியா பட்டின் நடிப்பிற்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தது இப்படத்தில் அஜய் தேவ்கன், விஜய் ராஸ், வருண் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் கங்குபாயின் ஆட்டம் தொடங்கி ஓராண்டு ஆவதாக பலர் ட்விட்டரில் போஸ்ட் போட்டு வருகின்றனர் கங்குபாய் காத்யாவாடி படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உள்ளது