சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழை அடித்து ஓய்ந்திருக்கிறது. மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் இந்த சூழலில், நம்மை நாமே இளைப்பாறிக் கொள்ள, இரண்டு ஓவியங்களுக்கு இடையில் 6 வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கலாமா?


ஓர் அழகிய, அதே நேரம் அடர்த்தியான ஓவியம். வெண்மை படந்த பனிப் பிரதேசத்தில், பனி மனிதர்கள் வாழும் இடமது. மரங்கள் அனைத்தையும் குளுகுளு பனி போர்த்தி இருக்கிறது. ஆங்காங்கே வீடுகள் இருக்கின்றன. குருவிகளும் விலங்குகளும் இருக்கும் அந்த ஓவியங்களுக்கு இடையில்,  6 வித்தியாசங்கள் இருக்கின்றன.


வித்தியாசங்களை அரை நிமிடத்தில் அதாவது 30 விநாடியில் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?


புகைப்படத்தை உற்று கவனியுங்கள். 


இடதுபுறம் உள்ள வீட்டின் ஜன்னல்களின் அமைப்பை இரண்டு படங்களுடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்.  வித்தியாசம் தெரிகிறதா? இரண்டாவது வீட்டில் தொங்கும் மணிகளின் வண்ணங்களில் வித்தியாசத்தைக் கவனித்தீர்களா? அதே வீட்டின் மேலே உள்ள குருவி இன்னோர் ஓவியத்தில் உள்ளதா?


அதற்குக் கீழே உள்ள பூனை ஒன்றில் மிஸ்ஸிங். அதற்கு வலது புறத்தில் உள்ள பனி மனிதரின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள துணியின் வண்ணம் மாறி இருக்கிறது. வலது புறம் உள்ள வீட்டின் மேலே மரத்துக்கு அருகே செடி கிளைத்து, வளர்ந்து இருக்கிறது. இதோ கீழே ஓவியத்தில் விடையைக் காணுங்கள்.




இந்த படம் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!


புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!


இதையும் வாசிக்கலாம்Puzzle: மூளையை சுறுசுறுப்பாக்கும் பட புதிர்: 7 விநாடிகளில் 4 வார்த்தைகள்தான்! கண்டுபிடிங்க பார்க்கலாம்!