மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ (Minister Kiren Rijiju) தன் வீட்டுத் தோட்டத்தில் மகள் மைஷாவுடன் (Mysha) எலுமிச்சை பழம் பறிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


நரேந்திர மோடி அமைச்சரவையில் சட்ட துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, இந்தாண்டு மே மாதம் அமைச்சரவை மாற்றத்தின்போது மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அமைச்சர் ஒருவர் வீட்டில் தன் மகளுக்கு வீட்டுத் தோட்டத்தில் எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழம் பறித்து கொடுக்கும் வீடியோ வலைதளத்தில் பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 






அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவருடைய எக்ஸ் தளத்தில் மகளுடன் எலுமிச்சை பழம் பறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,”வீட்டுத் தோட்டத்தில் இருந்து ஃப்ரெஷ் பழங்களை பறிப்பது அலாதியானது. நீங்களும் பழ மரங்களை வளருங்கள். என் மகளுடன் ஃபெர்ச்சாக எலுமிச்சை பழம் பறிச்சாச்சு.. ஸ்வீட் லெமன் வித் மைஷா.” என்று பதிவிட்டுள்ளார்.


அமைச்சரவையில் பொறுப்பு வகித்தாலும் வீட்டில் மகளுடன் குழந்தையாக மாறி குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுவது போன்றிருக்கிறது இந்த வீடியோ. இந்த வீடியோவில் அப்பாவுடன் மகிழ்ச்சியாக இருக்கும் மைஷாவின் சிரிப்பை காண்கையில் அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.


அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள வீடியோவில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். “ ஆமாம். வீட்டுத் தோட்டிலிருந்து கிடைக்கும் பழங்கள் சுவையானவை.”






“ உங்கள் மகளின் மகிழ்ச்சியான சிரிப்பு விலை மதிப்பற்றது.”






” நீங்கள் ஒரு சிறந்த அப்பா..” என்று பலரும் வீடியோவை ரசித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.