கர்நாடகா: புதுப்பிக்கும் பணியின்போது இடிந்து விழுந்த மூன்று மாடிக் கட்டிடம் - வைரல் வீடியோ

கர்நாடகா பங்கார்பேட் பகுதியில் புதுப்பிக்கும் பணியின்போது மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

பெங்களூருவில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள கர்நாடகாவின் கோலார் தாலுகாவில் உள்ள பங்கராபேட் தாலுகாவில் வெள்ளிக்கிழமை மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. பங்காரப்பேட்டை தண்டு ரோடு அருகே ராஜ்குமார் என்ற நபருக்கு சொந்தமான கட்டிடம் இருந்தது. தரை தளத்தில் சீரமைப்பு பணியின் போது இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Continues below advertisement

உள்ளே சிக்கியிருந்த மூன்று குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். இடிந்து விழுந்ததில் அதன் எதிரே உள்ள தனியார் பள்ளி வளாகமும் சேதமடைந்துள்ளது. மேலும், பங்காரப்பேட்டையில் உள்ள பரபரப்பான கே.இ.பி சாலையில் கட்டிட சேதம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த பங்கார்பேட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

இதுகுறித்து பங்கார்பேட் போலீசார் கூறுகையில், “ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் பங்கார்பேட்டயில் உள்ளது. அவர் தனது கட்டிடத்தின் தரை தளத்தை புதுபிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது முக்கியமான பில்லர் சேதமாகியுள்ளது. இதையடுத்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று குடும்பங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் எதிரே உள்ள பள்ளிக்கூடத்தின் கட்டிடமும் சேதமடைந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola