சமூக வலைதளங்களில், விபத்துக்குள்ளான ஊழியர் மற்றும் மேலாளர் இடையேயான சேட்களுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். என்ன நடந்தது என பார்ப்போம். 


கார் விபத்தில் ஊழியர்:


சமூக வலைதளங்களில் , ஒரு நபர் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில்,தான் கார் விபத்தில் சிக்கி இருப்பதாகவும், அதனால், அலுவலகத்திற்கு வருவதற்கு தாமதமாகும் என மேலாளருக்கு தெரிவித்துள்ளார். மேலும் , அவர் விபத்துக்குள்ளான காரின் புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறார். 



விபத்தில் ,அவர் நலமுடன் உள்ளாரா ? என்ன ஆயிற்று என கேள்வி எழுப்பாமல், எந்த நேரத்தில்அலுவலகத்திற்கு வருவீர் என மேலாளர் கேள்வி எழுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலாளர் கருத்து:



இது மட்டும் தெரிவித்தது மட்டுமல்லாமல், நீங்கள் தாமதமாக வருவதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்கள் குடும்பத்தில் ஏதேனும் உயிரிழப்பு தவிர இதர காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தாமதமானதற்கு காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மேலாளர் தெரிவித்துள்ளார். 


எதிர்ப்பு:


இந்த பதிவுகளை சமூக வலைதளங்களில் ஒருவர் பகிர்ந்ததையடுத்து, இது வைரலானது. பலரும் மேலாளரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. 
விபத்தில் சிக்கிய ஊழியரை, நலம் விசாரிக்காமல் கருணையற்று எப்போது வருவீர் என கேட்பது எல்லாம் மன்னிக்க முடியாது, தயவு செய்து வேறொரு நிறுவனத்திற்கு மாறி விடுங்கள் அல்லது மேலாளரை வேறு நிறுவனத்திற்கு மாற்ற நிர்வாகத்திடம் முறையிடுங்கள் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.


பயனர்களில் ஒருவர், மீண்டும் அந்த வேலைக்குச் செல்ல வேண்டாம். எதிர்காலத்தில் ஏதாவது நிறுவனமும் நீங்கள் ஏன் வெளியேறினீர்கள் என்று கேட்டால், நீங்கள் இந்த ஸ்கிரீன்ஷாட்டை காட்டவும் என தெரிவித்திருக்கிறார்.


இருப்பினும்,  சிலர் தங்களது முதலாளியுடன் பழகிய சில நேரமறையான நிகழ்வுகளையும் பகிருவதையும் பார்க்க முடிந்தது.  


உழைப்பு சுதந்திரம்:


மனிதர்கள் வேலைக்குச் செல்வது, தங்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கும், நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக என்று சொல்லாம். மனிதர்களுக்கு அலுவலகம் மட்டுமே உலகம் இல்லை, அது ஒரு பகுதிதான், அவர்களுக்கு குடும்பம் , நட்பு வட்டாரம், பொழுதுபோக்கு உள்ளிட்டவைகள் இருக்கும். மனிதர்களுக்கான உழைப்பு சுதந்திரத்தை முறையாக நிறுவனங்கள் வழங்க வேண்டும்.


அப்பொழுதுதான் நிறுவனங்களுடன் இணக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் வேலை செய்ய முடியும், அதுதான் நிறுவனத்திற்கும் ஊழியருக்கும் வளமானதாக அமையும்.