ஓடிக்கொண்டே இருக்கும் உலகில் ஓரிரு நிமிடங்கள் ஓய்வாக இருப்பதும் பிடித்தவற்றைச் செய்ய வேண்டும் என்பதும்தான் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. 


நுகர்வதை மட்டுமே மனிதர்களின் புதிய இயல்பாக மாற்றி விட்ட செல்போன், காட்சி ஊடகங்களுக்கு மத்தியில். மூளையைச் சற்றே யோசிக்க வைத்து, வேலை கொடுக்க வேண்டியதும் அவசியமாக மாறிவிட்டது.
இன்று 6 வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது, படப் புதிர்கள், புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்கு நடுவே கணிதப் புதிர்களை அவிழ்க்கலாம். இதனால் சோம்பிக் கிடக்கும் மனதை புத்துணர்ச்சி மிக்கதாக மாற்ற முயற்சிக்கலாம்.


ஓவியத்தைப் பாருங்கள். கரடி வலது ஓரத்தில் நிற்க, ஆந்தை உறங்கிக் கொண்டே இடது ஓரத்தில் நிற்கிறது. இரண்டுக்கும் நடுவில், கரும்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சில எழுத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன.


கீழே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய 4 குறியீடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஏதேனும் மூன்றைப் பயன்படுத்தி, சரியான விடையைக் கண்டுபிடியுங்கள், பார்க்கலாம். 



என்ன கண்டுபிடிக்க முடிந்ததா? 


முடியாதவர்கள் கீழே பாருங்கள். 


சின்ன வயதில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். 
ந்த ள்ளல் பெயர் கூர்ணன். இதன் முதல் எழுத்துகள் வரிசையில் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும். அதாவது, அ- அடைப்புக் குறி, வ- வகுத்தல், பெ- பெருக்கல், கூ- கூட்டல், க- கழித்தல் என்ற வகையில் கணிதச் செயல்பாடுகளைச்  செய்ய வேண்டும். 




அவ்வாறு பார்த்தால் மூன்றையும் நான்கையும் பெருக்கினால் 12 வரும். அதை இரண்டுடன் கூட்டினால் 14 வரும். அதில் 5-ஐ கழித்தால் 9 வரும். 


மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கிமூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!


- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!


இதையும் வாசிக்கலாம்: Brain Teaser: ஓவியத்தில் ஒளிந்திருக்கும் 3 மணிகள்; 30 விநாடிகளில் கண்டுபிடிக்கணும்!- முடியுமா?