கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் மழை அடித்துப் பிளக்கிறது. மழை, அரசியல், ஐபிஎல் செய்திகளுக்கு நடுவே, சற்றே யோசிக்க வைக்கும் புதிர்களை விடுவிக்கலாமா?
இத்தகைய புதிர் முடிச்சுகளை அவிழ்ப்பதன் மூலம் நம் மூளையின் சிந்தனைத் திறனை கூர்தீட்ட முடியும். சோம்பி இருக்கும் பொழுதையோ மனதையோ சுவாரசியமானதாக மாற்ற முடியும். அந்த வகையில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என எல்லா தரப்பினருமே இந்த புதிரை விடுவிக்க முயற்சிக்கலாம். என்ன, தயாரா?
கிறிஸ்துமஸ் ஓவியம்
அதுவோர் அழகிய ஓவியம். பனி சூழ்ந்த வீடு. ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் பற்ற வைக்கப்பட்டு, எரிந்து கொண்டிருக்கின்றன. கிறிஸ்துமஸ் மரம் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. பனி போர்த்திய வீடுகளையும் மலைச் சிகரங்களையும் மரங்களையும் கொண்ட ஓவியம் சுவற்றி மாட்டப்பட்டு இருக்கிறது.
பரிசுப் பொருட்கள் வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்டு, அடுக்கப்பட்டு இருக்கின்றன. நெருப்பு மூட்டப்பட்டு, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கே தரையில் சாக்லேட்டுகள் சிதறிக் கிடக்கின்றன. நரியும் முயலும் இன்னொரு விலங்கும் கைகளை உயரத் தூக்கியும் கைகளைத் தட்டியும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றன. மேலே காலுறைகள் கட்டித் தொங்க விடப்பட்டிருகின்றன.
இந்த ஓவியத்தில் 3 இடங்களில் மணி ஒளிந்திருக்கிறது. இதை 30 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
என்ன கண்டுபிடிக்க முடிந்ததா? முடியாதவர்களுக்கு இதோ விடை.
ஓவியத்துக்குள் மாட்டப்பட்டிருக்கும் ஓவியத்தில் ஒரு மணியும் காலுறையில் ஒரு மணியும் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒரு மணியும் ஒளிந்திருக்கிறது, பாருங்களேன்..
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!
- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!
Brain Teaser: பனி மனிதர்களுக்கு நடுவிலே பதுங்கி இருக்கும் கரடி- 10 விநாடி சவாலுக்கு நீங்க தயாரா?