ஆப்டிக்கல் இல்யூஷன் (Optical Illusion) எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள்தான் இன்றைய நாளின் ட்ரெண்ட். இத்தகைய புதிர் ஒன்றை இப்போது காணலாம்.


ஒரேபோல இருக்கும் ஓவியங்கள் அல்லது புகைப்படங்களில் வேறு மாதிரியாக இருக்கும் ஒன்றையோ, மறைந்திருக்கும் ஒன்றையோ மிக வேகமாக கண்டுபிடிப்பதுதான் இன்றைய சவால். இதன்மூலம் நம் மூளையின் சிந்தனைத் திறனை கூர்தீட்ட முடியும். சோம்பி இருக்கும் பொழுதையோ மனதையோ சுவாரசியமானதாக மாற்ற முடியும். 


அந்த வகையில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என எல்லா தரப்பினருமே இந்த சுவாரசிய விளையாட்டை முயற்சிக்கலாம். என்ன, தயாரா?


இந்த ஓவியத்தைப் பாருங்கள். 


கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டி உள்ளது. கிறிஸ்துமஸ் தாத்தா, தன் தொப்பை வயிற்றைத் தள்ளிக்கொண்டு பரிசுகளை அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறார்.


பனி மனிதர்கள் கேரட் மூக்குடனும் தலையில் தொப்பி உடனும் கிறிஸ்துமஸ் தாத்தாவைச் சூழ்ந்து நிற்கின்றனர். அருகில் கிறிஸ்துமஸ் மரம் அலங்காரங்களோடு நிற்கிறது. அதையும் சில பனி மனிதர்கள் கட்டி அணைத்துக் கொண்டிருக்கின்றனர்.


ஆங்காங்கே பரிசுப் பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.  கிறிஸ்துமஸ் தாத்தா தலையில் இருந்த தொப்பி காணாமல் போயிருக்கிறது. கூட்டத்தில் தொலைந்த தொப்பி எங்கே இருக்கிறது? 10 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


கிறிஸ்துமஸ் தாத்தாவின் வலது மேல் புறத்தில் ஒரு பனி மனிதனைப் பாருங்கள். தலையில் கிறிஸ்துமஸ் தொப்பியுடன் பின்னால் பரிசுடன் குறுஞ்சிரிப்பை உதிர்ப்பது தெரிகிறதா?


மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கிமூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!


- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!


இதையும் வாசிக்கலாம்: Brain Teaser: ஓவியத்தில் ஒளிந்திருக்கும் 3 மணிகள்; 30 விநாடிகளில் கண்டுபிடிக்கணும்!- முடியுமா?