காளான் கூட்டத்துக்கு நடுவே ஒளிந்திருக்கும் குட்டி எலியைக் கண்டுபிடிக்க வேண்டும். முயற்சி செய்கிறீர்களா?
நுகர்வை மட்டுமே மனிதர்களின் புதிய இயல்பாக மாற்றி விட்ட செல்போன், காட்சி ஊடகங்களுக்கு மத்தியில், நம் மூளையைச் சற்றே யோசிக்க வைத்து, வேலை கொடுக்க வேண்டியதும் அவசியமாக மாறிவிட்டது.
6 வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது, படப் புதிர்கள், புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் பொருட்கள் என நம் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கலாம். இதனால் சோம்பிக் கிடக்கும் மனதை புத்துணர்ச்சி மிக்கதாக மாற்ற முயற்சிக்கலாம்.
ஓவியத்தைப் பாருங்கள். பச்சை, மஞ்சள், சிவப்பு என விதவிதமான வண்ணங்களில், சிறிதும் பெரிதுமாய் ஏராளமான காளான்கள் முளைத்து நிற்கின்றன. இடையிடையே சில செடிகளும் வளர்ந்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் சிறிதாய் ஓர் எலி ஒளிந்திருக்கிறது. அதை அரை நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன கண்டுபிடிக்க முடிந்ததா?
முடியாதவர்கள் கீழே பாருங்கள்.
புகைப்படத்தின் நடுவே இடது ஓரத்தில் ஆரஞ்சு வண்ண காளான் நிற்கிறது, அதன் மீது ஏறி வெண்ணிற எலி ஒன்று எட்டிப் பார்க்கிறது.
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!
- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!
இதையும் வாசிக்கலாம்: Brain Teaser: எளிமையான கணிதப் புதிர் முடிச்சை அவிழ்க்கலாமா? ஒரு நிமிடம்தான் நேரம்