அன்றாடங்களில் இருந்து சற்றே விடுபட்டு, புத்துணர்ச்சி தரும் புத்தம்புதிய விஷயங்களை முயற்சிப்பது எல்லோருக்கே பிடித்தமான ஒன்றாக இருக்கும். அந்தக் காலத்தில் எல்லாம் நாளிதழ்கள், வார இதழ்களில் வெளியாகும் குறுக்கெழுத்துப் போட்டி, புதிர்களை விடுவிப்பதற்காக ஒரு தலைமுறையினர் காத்துக் கிடப்பார்கள்.


எல்லாமே வேக மயமாகிவிட்ட இந்த தலைமுறையில், டிஜிட்டலில் இத்தகைய விளையாட்டுகளே சற்றே விளையாடி, இளைப்பாறலாம் வாருங்கள்.


ஓர் அழகிய ஓவியம். அதில், பனி மனிதர்கள் ஓரிடத்தில் குவிந்து கிடக்கின்றனர். அவர்கள் வழக்கம்போல கேரட் மூக்கினைக் கொண்டிருக்கிறார்கள். கழுத்தில் ஸ்கார்ஃப். சிலர் தலையில் தொப்பியும் குல்லாக்களும். இவர்கள் அனைவருக்கும் நடுவே கரடி ஒன்று சிரித்துக்கொண்டே மறைந்து இருக்கிறது.


இதை 10 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். முயற்சி செய்கிறீர்களா?


என்ன கண்டுபிடிக்க முடிந்ததா? முடியாதவர்களுக்கு இதோ விடை.


ஓவியம் முழுக்க எண்ணிலடங்கா பனி மனிதர்கள் ஒட்டி ஒட்டி நிற்கிறார்கள். அவர்களுக்கு நடுவே வலது கீழ் ஓரத்தில் ஒரு கரடியும் நிற்கிறது. அதற்கு கேரட் வடிவ மூக்கு இல்லாமல், வழக்கமாக இருப்பது போல இருக்கிறது என்பதை கவனித்தீர்களா?




மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கிமூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!


- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!


இதையும் கண்டுபிடிக்கலாம்: Brain Teaser: வான் கோழி கூட்டத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் 3 சேவல்கள்; கண்டுபிடிங்க பார்ப்போம்!