வாசகர்களே... உங்களின் மொபைலில், ரீல்ஸ் எனப்படும் குறுங்காணொளிகள், பிரேக்கிங் செய்திகள், நண்பர்களுடனான அரட்டை ஆகியவற்றுக்கு சற்றே இளைப்பாறல் கொடுங்கள். இடையில், மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிரை விடுவிக்கலாம் வாருங்கள்.


இந்த ஓவியத்தை உற்றுப் பாருங்கள். கொம்புகள் சூழ மான்கள் அருகருகே நின்று கொண்டிருக்கின்றன. இடையில் கிறிஸ்துமஸ் தாத்தா சிரித்துக் கொண்டிருக்கிறார். சில மான்கள் குளிர் தாங்காமல் கழுத்தில் ஸ்கார்ஃபைச் சுற்றி இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன.


மான்கள் கூட்டத்துக்கு நடுவே ஒரு கரடி மறைந்திருக்கிறது. இதை 30 விநாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


என்ன கண்டுபிடிக்க முடிந்ததா? முடியாதவர்களுக்கு இதோ விடை..! 


மான்களின் கொம்புகள் அனைத்துப் புறங்களிலும் இருந்ததால், கரடியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம். இரண்டு மான்களின் கொம்புகளுக்குப் பின்பு, கரடி ஒன்று ஒளிந்திருக்கிறது. இன்னும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், இந்த ஓவியத்தைப் பாருங்கள்.




மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!


- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!


இதையும் கண்டுபிடிக்கலாம்: Brain Teaser: வான் கோழி கூட்டத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் 3 சேவல்கள்; கண்டுபிடிங்க பார்ப்போம்!