தேனி மாவட்டம் தமிழகத்தை ஒட்டியிருக்ககூடிய கேரள மாநிலம் குமுளியில் தேக்கடி புலிகள் சரணாலயத்திற்கு வருமானத்தை அதிகரிக்கும் புதிய சுற்றுலாத் திட்டம் விரைவில் துவக்கப்படஉள்ளது. இதற்காக கேரள வனத்துறை புதிய படகுகள் இயக்குவதற்கு தயாராகி வருகிறது. தமிழக கேரள எல்லையில் 925 சதுர கி.மீ பரப்பளவில் தேக்கடி புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உலக வங்கி  ஆண்டு தோறும் ரூ.300 கோடி நிதி வழங்கி வருகிறது.


துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதில்


தற்போது தேக்கடியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாதுறை இணைந்து 8 படகுகள் இயக்கி வருகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு ருபாய் பல லட்சம் வருவாய் வருகிறது. இந்த புதிய திட்டம் தற்போது வருவாயை மேலும் பெருக்கும் வகையில் கேரள வனத்துறைசார்பில் சிறப்பு சுற்றுலா திட்டம் புதிதாக துவக்கப்பட்டு இதற்காக புதிய படகுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த சிறப்பு திட்டத்தில் வனப்பகுதியில் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. 


Yograj Singh: புலியைக் கொன்றாரா யுவராஜ் சிங் தாத்தா? யோகராஜ் சிங் சொன்ன சர்ச்சை பதில்!


இதற்காக ரூ.19 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வனத்துறையின் இரண்டு பைபர் படகுகள் இயக்கப்படும். அவற்றின் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சிறப்பு படகுகள் காலை 7:00 மணி முதல்மாலை 5:30 மணி வரை 7டிரிப் இயக்கப்படும். ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் அல்லது தனி நபர் படகில் பயணம் செய்யலாம். குடிநீர், சிற்றுண்டிசேவைகள் படகில் வழங்கப்படும்.


CM MK Stalin: "11 ஆயிரம் பேருக்கு வேலை! அமெரிக்க பயணம் சாதனைக்குரியது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


Bajaj Chetak Blue vs TVS iQube: பஜாஜ் சேடக் ப்ளூ? டிவிஎஸ் ஐக்யூப்? எந்த மின்சார ஸ்கூட்டர் வாங்கலாம் - ஒப்பீடு இதோ..!


பறவை மற்றும் பட்டாம்பூச்சி, வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க வருபவர்களுக்கு சிறப்பு படகு சவாரி பயனளிக்கும். சீசனில் படகு டிக்கெட் பெற முடியாத குடும்பங்கள் ரூபாய் 19000 செலுத்தி சிறப்பு படகு சவாரி செய்யலாம் தேக்கடியில் ஏரியில் நடுவில் உள்ள லேக் பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வனத்துறை கட்டத்தில் இரண்டு தங்கும் அறைகள் தயாராகி வருகின்றன. இரண்டு பேர் தங்கக்கூடிய ஒரு அறைக்கு உணவு உட்பட ரூபாய் 5000 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஇதில் தங்க வருபவர்களுக்கு படகு பயணம் வனப்பகுதிக்கு ட்ரக்கிங் வியூ பாயிண்ட் பகுதியில் புகைப்படம் எடுக்க வாய்ப்பு இலவசமாக ஏற்படுத்தப்படும். ஓணம் பண்டிகையொட்டி புதிய சுற்றுலாத் திட்டங்கள் துவக்கப்பட உள்ளன ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை புலிகள் சரணாலயத்தின் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.