இந்தியாவில் தனக்கென தனி மார்கெட்டை வைத்திருக்கும் ஜியோமி, சீரான இடைவெளியில் பல்வேறு மாடல் போன்களை இந்தியாவில் களமிறக்கி வருகிறது. அதன்படி, Mi 11 Lite மாடலை இந்தியாவில் வரும் ஜூன் மாதம் 22-ஆம் தேதி வெளியிடுகின்றது. 'ஜியோமி இந்தியா'வின் விற்பனைப்பிரிவு அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவலை அப்போது பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. 


ஜியோமி நிறுவனம் வெளியிடவுள்ள Mi 11 Lite 4ஜி மற்றும் Mi 11 Lite 5ஜி ஆகிய இரண்டு மாடல்களும் உலக சந்தையில் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஏப்ரல் மாதம் முதல் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் 22 முதல் இந்த போன் இந்திய சந்தையில் கிடைக்கும். மேலும் Tuscany Coral, Jazz Blue மற்றும் Vinyl Black ஆகிய மூன்று வண்ணங்களில் இது வெளியாகும் என்றும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.  






இந்தியாவில் வெளியாகாவிட்டாலும் பல்வேறு நாடுகளில் Mi 11 Lite வெளியாகியுள்ளது. அதன்படி அதன் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம். 6.55 டிஸ்பிளே கொண்டுள்ளது. இப்போது வெளியாகும் போன் மாடல்கள் அனைத்திலும் டிஸ்பிளே பெரியதாகவே கொடுக்கப்படுகிறது. 


Qualcomm Snapdragon 732G ப்ராசஸர் கொண்டதாகவும், ஆண்ட்ராய்ட் 11 OS கொண்டதாகவும் உள்ளது. கேமராக்களில் கவனம் செலுத்தும் ஜியோமி, 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.  இதனால் தெளிவான செல்ஃபி போட்டோ, வீடியோ எடுக்க முடியும். அதேபோல பின்பக்க கேமராவை பொருத்தவரை 64மெகாபிக்ஸல் + 8மெகாபிக்ஸல் + 5மெகாபிக்ஸல் ஆகிய 3 வகை கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஜிபி RAM, 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கிறது. பேட்டரி கெபாசிட்டி 4250mAh. 33w சார்ஜரும் கொடுக்கப்படுகிறது. 


இப்போது சந்தைப்படுத்தும் மாடல்கள் பேட்டரி கெபாசிட்டியில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. 5000mAh முதல் 6000mAh வரை பேட்டரி கெபாசிட்டி கொடுக்கப்படுகிறது. அதனடிப்படையில் பார்த்தால் இந்த மாடல் பேட்டரி கெபாசிட்டி சற்று குறைவானதுதான். 1080x2400 pixels கொண்டதாகவும் இந்த மாடல் உள்ளது. பக்கவாட்டில் விரல்ரேகை சென்சார், 157கிராம் எடை கொண்டதாகவும் இந்த மாடல் உள்ளது.




Reliance AGM 2021 : ரூ 2500 க்கு ஸ்மார்ட்போன்? - ஜியோவின் அடுத்த மெகா ப்ளான்!


MI 11 ULTRA மாடல் மட்டுமே MI 11 சீரிஸில் இந்தியாவில் வெளியாகியுள்ள ஒரே போன். கடந்த ஏப்ரல் மாதம் ஜியோமி வெளியிட்ட அந்த மாடல் 6.8 இஞ்ச் டிஸ்பிளே, டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட், 12 ஜிபி ரேம், 256 இண்டர்நல் ஸ்டோரேஜ், 20MP செல்ஃபி கேமரா, 50MP+40MP+40MP என்ற அசத்தலான 3 பின்பக்க கேமராக்கள், 5,000 mAh பேட்டரி கெபாசிட்டி என வேற லெவல் சிறப்பம்சங்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.