Reliance AGM 2021 : ரூ 2500 க்கு ஸ்மார்ட்போன்? - ஜியோவின் அடுத்த மெகா ப்ளான்!

தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஜியோ. அனைவருக்குமான இணைய சேவை கிடைத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

Continues below advertisement

தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஜியோ. அனைவருக்குமான இணைய சேவை கிடைத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், வரும் ஜூன் 24ம் தேதி  ஜியோ நிறுவனத்தின்  2021 ஆண்டிற்கான பொதுக்குழு மாநாடு (Annual general meeting) நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ பல ஆச்சர்யமூட்டும் திட்டங்களையும், கேட்ஜெட்ஸ்களையும் அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாக மற்ற எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Continues below advertisement

தற்பொழுது 4ஜி சேவைகள் வழங்குவதில் முன்னோடியாக இருக்கும் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை இந்த  கூட்டத்தின் போது அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. ஏர்டெல் தனது 5 ஜி சோதனை குறித்து சமீபத்தில் அறிவிப்பு  வெளியிட்டிருந்தது. ஜியோ 2021ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் தங்களது 5ஜி சேவை குறித்தான அறிவிப்பை வெளியிடுவோம் என அறிவித்திருந்தது.  முன்னதாக மும்பை போன்ற பெருநகரங்களில் தனது 5ஜி சேவையின் சோதனையை  தொடங்கிவிட்டது.


எனவே இந்த எ.ஜி.எம்.  2021 மாநாட்டில் இது குறித்தான அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது . அவ்வாறு ஜியோ 5 ஜி பயன்பாட்டிற்கு வரும் பொழுது , ஜியோ 4ஜி போலவே வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என நம்பலாம்.

இதை தவிர ஜியோ 5ஜி மொபைல்போன், ஜியோ நோட் புக் உள்ளிட்ட கேட்ஜெட்ஸ் குறித்த அறிவிப்பையும் ஜியோ நிறுவனம் வெளியிட இருப்பதாக தெரிகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு மாநாட்டின் பொழுது ஜியோ நிறுவனம் கூகுளுடன் இணைந்து, புதிய மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்தது.


இந்த நிலையில், அந்த மொபைல்போன் குறித்த விவரங்களின் அறிவிப்பை இந்த ஆண்டு மாநாட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கூகுளுடன் இணைந்து உருவாக்கப்படுவதால் ஆண்ட்ராய்ட் இயக்குதளத்தை ஜியோ ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். மேலும்  வெளியாகும் அந்த  ஸ்மார்ட் மொபைல் போனானது இந்தியாவின் மிக குறைந்த விலைக் கொண்ட மொபைல் போன் என்ற அங்கீகரத்தை பெறும் என தெரிகிறது. அதன் விலை ரூ.2,500 இருக்கலாம் என சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஐந்தாயிரத்திற்கும் குறைவாகவே ஜியோ தங்களின் மொபைல் போன்களை சந்தைப்படுத்த விரும்புவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல, ஜியோ நோட்புக் என்ற பெயரில்  லேப்டாப்பை தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாக கடந்த மார்ச் மாதம் தகவல்கள் வெளியானது. அவற்றின் அறிவிப்பும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : Samsung Galaxy Tab S7 | இரு புதிய டேப்லெட் - இந்திய சந்தையில் அறிமுகம் செய்த சாம்சங்!

Continues below advertisement
Sponsored Links by Taboola