வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்டட் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் சப்போர்ட்டை டெஸ்க்டாப் வெர்ஷனுக்கும் வாஸ்ட்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.


விண்டோஸ் 10 இயங்குதளம் 64-பிட் வெர்ஷனிலும் மேக்ஓஎஸ் 10.13 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எண்ட்-டு-எண்ட் என்கிரிப்டட் வெர்ஷன் என்பதால் உங்கள் போன் அல்லது உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகளில் நீங்கள் பேசுவதை கேட்கவோ அல்லது உங்களை பார்க்கவோ எங்கள் நிறுவனத்தில் யாராலும் முடியாது.


நாங்கள் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பிலிருந்து வீடியோ கால் செய்து பார்த்து வருகிறோம். ஏதேனும் பிரச்சனை இருந்தால் மேம்படுத்துவோம் என்று அந்த அறிக்கையில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


வாட்ஸ்அப் வெப்பில் இருந்து வீடியோ கால் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் வெப்பில் லாகின் செய்யவும். நீங்கள் யாரை அழைக்க வேண்டுமோ அவர்களின் கான்டாக்டாட்டை தேர்வு செய்து வீடியோ கால் ஐகான் மீது கிளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் வெப்பில் வீடியோ கால்களை  செய்ய முடியும். டெக்ஸ்டாப் வெர்ஷனில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்ய முடியும். தற்போதைக்கு ஒன்-டு-ஒன் வாய்ஸ் அண்ட் வீடியோ கால்ஸை செய்ய முடியும். 


Warning Whatsapp : வாட்ஸ்அப் பயன்படுத்துறீங்களா..? அப்போ நீங்க எச்சரிக்கையா இருக்கணும்! வெளியான அதிர்ச்சி தகவல்..


வீடியோ ஐகான் மீது தட்டவும். பின்னர், கீழே நீங்கள் பட்டன்களை பார்ப்பீர்கள். மூன்று ஸ்டார்ஸ் இருக்கும் பட்டனை கிளிக் செய்தால் மோர் ஆப்ஷன்ஸ் வரும். அதன் மீது தட்டினால் ஸ்கிரீன் ஷேர் ஆப்ஷன் வரும்.
இவ்வாறாக நீங்கள் வாட்ஸ்அப் வீடியோ காலை ஷேர் செய்ய முடியும். வாட்ஸ்அப்பில் கான்ஃபரென்ஸ் காலை எப்படி மேற்கொள்ள முடியும்? வாட்ஸ்அப் அக்கவுண்டை ஓபன் செய்து, "கால்ஸ்" டேப் மீது தட்டவும்.


இவ்வாறாக ஸ்மார்ட்போனில் இருந்து மட்டுமல்லாமல், டெஸ்க்டாப்பிலிருந்தும் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்ய முடியும்.


முன்னதாக, தகவல் பரிமாற்றத்தில் முக்கிய தொழில்நுட்பமாக மாறியுள்ள, வட்ஸ்-அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் தனிநபர் தரவுகள் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் குறைந்தாலும், பொதுமக்களிடையே வாட்ஸ்-அப் செயலியின் செயல்பாடு குறைந்தபாடு இல்லை. இதனால் தான் தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது பல புதிய தொழில்நுட்ப வசதிளை வழங்கி வருகிறது. உதாரணமாக,  256 பேர் மட்டுமே ஒரு வட்ஸ்-அப் குழுவில் சேர முடியும் என்றிருந்த  எண்ணிக்கை வரம்பு,  512 ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. 


அடுத்தடுத்து வந்த புதிய அப்டேட்கள்:


பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, பயனர்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பில் மெட்டா நிறுவனம் கவனம் செலுத்தி,  குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுன்செய்திகள் தானாக அழிவது, ஒருமுறை மட்டுமே பார்ப்பது போன்ற அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் பேசும் அம்சமும், அந்த அழைப்புக்கான லிங்கை சக பயனாளர்களுக்கு அனுப்பி, அதனை தொட்டு கான்பிரன்ஸ் வீடியோ காலில் இணையும் வசதியும், மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.