49 கோடி வாட்ஸ்-அப் பயனாளர்களின் தொடர்பு எண்கள் கசிந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான ஆராய்ச்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த 1,097 பேரின் எண்களும், அமெரிக்காவைச் சேர்ந்த 817 பேரின் எண்களும் கசிந்திருப்பது தெரியவந்துள்ளது. கசிந்துள்ள அனைத்து எண்களும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எண்களாகும்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
48.7 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தொடர்பு எண்கள் திருடப்பட்டு மிகப் பிரபலமான ஹேக்கிங் கம்யூனிட்டி ஃபோரத்தில் விற்பனை வைக்கப்பட்டது. 84 நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்கள் அந்த பட்டியலில் உள்ளது. இதில், 3.2 கோடி அமெரிக்கர்களின் எண்களும், 1.1 கோடி இங்கிலாந்துகாரர்களின் எண்களும், 1 கோடி ரஷ்யர்கள் எண்களும் அடங்கும்.
இதுதவிர, எகிப்து (2 கோடி பேரின் எண்கள்), இத்தாலி (3.5 கோடி பேரின் எண்கள்), சவுதி அரேபியா (2.9 கோடி), பிரான்ஸ் (2 கோடி), துருக்கி (2 கோடி) உள்ளன. அமெரிக்கர்களின் எண்கள் 7ஆயிரம் டாலர்களுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களின் எண்களை 2,500 டாலர்களுக்கும், ஜெர்மனியைச் சேர்ந்தவர்களின் எண்களை 2,000 டாலர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தரவுத்தளத்தை ஹேக்கர்கள் ஸ்பேமிங், ஃபிஷிங் முயற்சிகள், அடையாள திருட்டு மற்றும் பிற சைபர் கிரிமனல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் பல்வேறு தனியுரிமை செட்டிங்ஸ்களை வழங்கி வருகிறது. பயனர்கள் அதையெல்லாம் தேர்வு செய்து இன்னும் பாதுகாப்பாக தங்களது கணக்கை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
முன்னதாக, சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம், நடப்பு ஆண்டின் செப்டம்பரில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் இந்திய மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 ஆகிய தேதிகள் வரையில், 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப்பில் இருக்கிங்களா என்ற கேள்வி இன்று சந்திக்கும் எவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக் கொள்வார்கள்.
ட்விட்டரில் ஒரு வண்ண டிக் இல்லை… மூன்று வண்ணமாம்! ரிப்ளையில் அப்டேட் வெளியிட்ட எலன் மஸ்க்!
வெறும் தகவல்களை பரிமாறும் தளமாக மட்டுமல்லாமல், பணப் பரிவர்த்தனை செய்யவும், தொழில் சம்பந்தமாக வீடியோ கால் பேசும் வசதி, ஆவணங்களை அனுப்பும் வசதி என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதில் 8.72 லட்சம் கணக்குகள் பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என முன்கூட்டிய அறிந்து தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தது