Whatsapp Feature: குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்து ஸ்டேட்ஸ் வைக்கும்போது Notification சம்பந்தப்பட்ட நபருக்கு செல்லும் என்று மெட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாட்ஸ் அப்:


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ் அப் அறியப்படுகிறது. குறுந்தகவலை பகிறும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.  தங்கள் பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அடிக்கடி பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


அப்டேட்களை அள்ளித் தரும் மெட்டா:


அதன்படி, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் பயன்படுத்தும் அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு வசதிகளை மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட, ஒரே போனில்  இரண்டு வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான வசதியை அறிமுகப்படுத்தியது. 


இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று மற்றொரு வசதியை மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தும் வசதியை கொண்டு வர உள்ளது.  இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது போல, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் வசதி அறிமுகமாக உள்ளது. குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்து ஸ்டேட்ஸ் வைக்கும்போது Notification சம்பந்தப்பட்ட நபருக்கு செல்லும். எனினும், இதற்காக Privacy விதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 


இதைத் தொடர்ந்து,  மூன்றுக்கு மேற்பட்ட சாட்களை பின் (Pin) செய்து வைத்துக் கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வரப்பட உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மூன்று சாட்கள் வரை தான் பின் செய்து கொள்ளும்படியான வசதி உள்ளது. இந்த இரண்டு அம்பசங்களும் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் வெளிவரவில்லை. இந்த அம்சம் முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கப் பெரும் என்று கூறப்படுகிறது. 


அண்மையில் வெளியான அப்டேட்:


ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்களை தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்படும் நிலையில், இதனை எதிர்கொள்ள வகையில் பயனர்கள் தங்கள் லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே ப்ளாக் செய்து கொள்ளலாம். இதன் மூலம், வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சியாக உள்ளது.  இந்த வசதியை கொண்டு பயனர்கள் ஸ்மார்ட் போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை ப்ளாக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Android Warning: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அலர்ட்! ”இதை கண்டிப்பா பண்ணுங்க" : மத்திய அரசு அட்வைஸ்!