Android Warning: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அலர்ட்! ”இதை கண்டிப்பா பண்ணுங்க' : மத்திய அரசு அட்வைஸ்!

Warning Android Users : ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 11, 12,12L, 13 மற்றும் 14 உள்ளிட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Continues below advertisement

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை:

இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN), ஆண்ட்ராய்டின் பல்வேறு வெர்ஷன் இயங்குதளங்களிலும் பல பாதிப்புகளை கண்டறிந்துள்ளது. 11, 12,12L, 13 மற்றும் 14 உள்ளிட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் இந்த பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Continues below advertisement

இந்த பரவலான பிரச்னையால் அதிக எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் இந்திய சைபர் பாதுகாப்பு முகமையான CERT-IN வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தற்போதுள்ள பாதிப்புகளை பயன்படுத்தி முக்கியமான தகவல்களை திருடுவது,  உயர்ந்த சலுகைகள் பெறுவது மற்றும் குறிப்பிட்ட அமைப்பில் இருந்து சேவை கிடைப்பதை தடுப்பது ஆகிய நோக்கில் சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்பு எதனால்?

"ஃப்ரேம் வர்க், சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள், கர்னல் எல்டிஎஸ், ஆர்ம் பாகங்கள், மீடியாடெக் பாகங்கள், குவால்காம் பாகங்கள் மற்றும் குவால்காமில் மூடப்பட்டுள்ள முக்கிய பாகங்கள்  ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த பாதிப்புகள் ஆண்ட்ராய்டில் இருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிக ஆபத்து மிகுந்த பாதிப்புகளை கூகுளும் ஒப்புக் கொண்டுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அறிக்கையில், பாதுகாப்பு குறைபாடுகள் ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதிக்கிறது. அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாம்சங், ரியல்மீ, விவோ போன்ற பிராண்டுகளில் போன்களை வைத்திருக்கும் நபர்கள் இதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை எப்படி சரிபார்ப்பது?

ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் தங்களது சாதானத்தின் செட்டிங்ஸ் பயன்பாட்டிற்குச் சென்று, தங்களது சாதனத்தின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் எண்,  பாதுகாப்பு அப்டேட்களின் நிலை, Google Play சிஸ்டம் நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். அப்டேட்கள் கிடைக்கும்போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள். 

உங்களிடம் எந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன் உள்ளது என்பதை சரிபார்க்க:

தொலைபேசியின் செட்டிங்ஸ் பயன்பாட்டைத் திறக்கவும். திரையின் அடிப்பகுதியில் இருக்கும் about phone 2அதைதொடர்ந்து android version ஆகிய ஆப்ஷன்களை கிளிக் செய்யவும். உங்கள் "ஆண்ட்ராய்ட் வெர்ஷன்", "Android பாதுகாப்பு அப்டேட்கள்" மற்றும் "பில்ட் நம்பர்கள்" ஆகிய தகவல்களை அறியலாம். தேவையிருப்பின் அவற்றை அப்டேட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Mobile Update : மொபைல் அப்டேட் செய்யப்பட்டதா?

  • சாதனத்தின் செட்டிங்ஸ் பயன்பாட்டைத் திறக்கவும்.
  • Security பட்டனை கிளிக் செய்து பிறகு privacy - System & Updates ஆகிய பட்டன்களை அடுத்தடுத்து கிளிக் செய்யவும்
  • பாதுகாப்பு அப்டேட்களுக்காக, பாதுகாப்பு அப்டேட்டை கிளிக் செய்யவும்
  • Google Play சிஸ்டம் அப்டேட்களுக்கு, Google Play சிஸ்டம் அப்டேட்டை கிளிக் செய்யவும்

மேலும் படிக்க

One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் மாற்றங்கள் என்ன? பரிந்துரைப் பட்டியல் இதோ!

Continues below advertisement
Sponsored Links by Taboola