Whatsapp Update: வாட்ஸ் அப்பில் யுபிஐ செயலிகளை பயன்படுத்துவது போன்று புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Continues below advertisement

வாட்ஸ் அப்: 

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது பல்வேறு புதிய அப்டேட்டுகளை மெட்டா கொண்டு வர உள்ளது. 

புதிய வசதி:

அதாவது, வாட்ஸ் அப் செயலியில் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அம்சங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. அதில் ஒன்று தான், யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் ஆப்ஷனை கொண்டு வர உள்ளது மெட்டா.  ஏற்கனவே வாட்ஸ் அப்பில் பெமேண்ட் (Payment) என்ற ஆப்ஷன் உள்ளது. இதில் பயனர்களின் வங்கி கணக்குடன்  இணைக்கப்பட்டு  பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Continues below advertisement

இந்நிலையில், தற்போது யுபிஐ செயலிகள் அறிமுகமாக உள்ளது. அதாவது, கூகுள் பே, போன் பே, பேடிஎம்,  கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் வாட்ஸ் அப்பில் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும்படியான அம்சம் அறிமுகமாக உள்ளது. இருப்பினும்,  இந்த அம்சம் எப்போது அறிமுகமாகும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. 

இதுமட்டுமின்றி, வாட்ஸ் அப்பில் ஷாப்பிங் செய்து கொள்வது போன்று புதிய அம்சத்தையும் மெட்டா  அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், ஸ்விகி, சோமேட்டோ போன்று வாட்ஸ் அப்பில் சாப்பாடு ஆர்டர் செய்யும் வசதியும் அறிமுகமாக உள்ளது.  மேலும்,  விமான டிக்கெட்டுகளை முன்பதிவும் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளதாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் வந்த வசதி:

சமீபத்தில் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சேனல்கள் என்பது  உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்ப உதவும் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும். பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்க ஒருவித கோப்பகத்தை ( searchable directory ) வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி பொழுதுபோக்குகள், விளையாட்டுக் குழுக்கள், உள்ளூர் செய்திகள் போன்றவை தொடர்பான சேனல்களை விருப்பத்தின் பேரின் பயனாளர்கள் தேர்வு செய்யலாம். சாட், இமெயில் மற்றும் ஆன்லைன் பதிவுகளில் இருந்து கிடைக்கப்பெறும், இணைய முகவரிகள் மூலமாகவும் பயனர்கள் செய்திகளை அறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Chandrayaan 3: தூக்கத்தில் இருந்து மீண்ட சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர்.. நாளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் இஸ்ரோ..